நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள சிவில் சப்ளை ரேஷன் குடோன் ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சிவில் சப்ளை ரேஷன் குடோன் ஊழியர்கள் சுமார் 12 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் பணி நிரந்தரம், அடிப்படை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் சிவில் சப்ளை குடோன்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 370 பேர் ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக சிவில் சப்ளை சுமை தூக்குவோர் பாதுகாப்பு சங்கத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகி தாழையூத்து மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
இந்த வேலை நிறுத்தத்தால் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புவது பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Leave a Reply