கல்பாக்கம் : 800 மெகா வாட் மின் தயாரிப்புத் திறன் கொண்ட இந்தியாவின் அதி நவீன அனல் மின் நிலையம் 2017ம் ஆண்டில் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை அனல் மின் நிலையங்கள் சாதாரண அனல் மின் நிலையங்களை விட எரிபொருளை குறைவாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைவாக நிலக்கரியை ( எரிபொருளை ) பயன்படுத்தினாலும், மற்ற அனல் மின் நிலையங்களை விட கூடுதல் திறனுடனும், குறைந்த புகை வெளியேற்றத்துடனும் செயல்பட கூடியவையாகும்.
கல்பாக்கத்தில் செயல்பட்டுவரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம், பாரத் கனரக மின் நிறுவனம், தேசிய அனல் மின் கழகம் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பான அட்வான்ஸ்ட் அல்ட்ரா சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் என்றழைக்கப்படும் இந்த அதி நவீன நிலக்கரி அனல் மின் நிலையம் வெளியேற்றும் கரியமிள வாயு அளவும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.
Leave a Reply