காந்திநகர் : இந்தியாவி்ன முனன்ணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் (டிடிஎஸ்எல்), குஜராத்தில், 3ஜி சேவையை விஸ்தரிக்கும் பொருட்டு, ரூ. 500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாநில அரசுடன் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டாடா டெலிசர்வீசஸ் நிறுவன மண்டல உயர் அதிகாரி பிரதீப் திவிவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பநதம், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளர் ரவி சக்சேனா முன்னிலையில் கையெழுத்தானது. இதன்மூலம், மாநிலத்தில், தொலைதொடர்பு கட்டமைப்பை விரிவாக்க இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், தொலைதொடர்பு சேவை விரிவடைவதோடு மட்டுமல்லாமல், தங்கள் நிறுவன வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. இதன்மூலம், மாநிலத்தில், சிறந்த இண்டர்நெட் பிராட்பேண்ட் சேவை கட்டமைப்பை, பொதுத்துறைகள் மட்டுமல்லாது , தனியார் துறைகளும் பெறும்வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா டொகாமோ நிறுவனம் தான், நாட்டின் முதன்முதலில் 3ஜி சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம் என்பது குறிபப்பிடத்தக்கது.
Leave a Reply