4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தென்ஆப்ரிக்கா வெற்றி

போர்ட் எலிசபெத்: போர்ட் எலிசபெத்தில் நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து, இந்தியாவிற்கு 266 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. தென்ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஆம்லா 64 ரன்களும், டுமினி 71 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் சார்பில் யுவராஜ்சிங் 3 விக்கெட்டுகளும், நெஹரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய இந்தியா அணி 32.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் டி/எல் முறைப்படி தென்ஆப்ரிக்கா அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என அறிவிக்கப்பட்டது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் பெற்றுள்ளது. இந்தியாவின் சார்பாக விராத் கோலி 87 ரன்களும், ரெய்னா 20 ரன்களும் எடுத்தனர். தென்ஆப்ரிக்கா அணியின் டுமினி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *