மும்பை: வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாஸ்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற நிதியாண்டில் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.1 லட்சம் கோடி வரை முதலீடு செய்தன.
இந்த நிதியாண்டில் 3ஜி செல்போன் சேவைகள், வயர்லெஸ் இன்டர்நெட் சேவை உள்ளிட்ட நவீன வசதிகள், தொழில்நுட்ப சேவைகளை அளிக்க தங்களது தற்போதைய கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதற்காக ரூ.2 லட்சம் கோடி வரை இந்த நிறுவனங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கு்ம்.
அதே போல இப்போது நம் நாட்டில், செல்போன் இணைப்பு பெற்றுள்ளவர்கள் எ�ணிக்கை 70 கோடியாக உள்ளது. தற்போது ஆண்டுதோறும் ரூ.27,000 கோடிக்கு செல்போன் சாதனங்கள் விற்பனையாகின்றன.
2015ம் ஆண்டுக்குள் தொலைத் தொடர்புத் துறையின் வருவாய் ரூ.4.50 லட்சம் கோடியாக உயரும் என்றும் பாஸ்டன் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
Leave a Reply