இந்தியாவிற்கு தற்போது 7 லட்சம் மருத்துவர்கள் தேவை என்று எம்.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவர்கள் கழகத்தின்(அபிகான்) 66 வது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் எஸ்.கே.சரின் கூறியதாவது, “நாங்கள் &’விஷன் 2015&’ என்ற ஆவணத்தை உருவாக்கியுள்ளோம். அதில் நம் நாட்டிற்கு எத்தனை மருத்துவர்கள் தேவை என்பதைப் பற்றிய மதிப்பீடு இருக்கிறது. அதன்படி நம் மக்களுக்கு சுமார் 7 லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்.
தற்போது வருடா-வருடம் படிப்பு முடிந்து வெளிவரும் 35000 மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கையை 50000 என்ற அளவில் உயர்த்தினாலும், 7 லட்சம் என்ற எண்ணிக்கையை நாம் 2031 ஆம் ஆண்டில்தான் அடைவோம். ஆனால் அவ்வளவு நீண்ட காலம் நம்மால் காத்திருக்க முடியாது.
தற்போது மருத்துவ முதுநிலை படிப்புகளின் எண்ணிக்கையை 9000 என்ற நிலையிலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். மேலும் அந்த எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கூடும். மருத்துவ இளநிலை இடங்களுக்கு சமமாக முதுநிலை இடங்களை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கம். இந்த வருடம் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதி கேட்டு 76 விண்ணப்பங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு வந்துள்ளன. ஆனால் கடந்த வருடம் 19 விண்ணப்பங்கள்தான் வந்தன. மேலும் மருத்துவ கல்லூரிகளை அங்கீகரிப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். ஒரு மாதத்திற்குள் அந்த பணி முடிந்துவிடும் என்றார்.
Leave a Reply