இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் யுசுப்ராஸா கிலானி தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதனால் அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர்.
பாகிஸ்தானில் , ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி நடந்துவருகிறது. பிரதமராக யுசுப்ராஸா கிலானி கடந்த 2008-ம் ஆண்டு நடத்த பொதுத்தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஆசிப்அலி சர்தாரி தலைமையில் கூடியது. இதில் அமைச்சரவை கலைக்க கிலானிக்கு முழு அதிகாரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்நது கிலானி தனது அமைச்சரவையினை கலைத்தார். இதையடுத்து அமைச்சர்கள் தங்களது ராஜினாமாகடிதங்களை கிலானியிடம் கொடுத்தனர். சிறிய அளவிலான அமைச்சரவை தற்போது உள்ளது.இது குறித்து கிலானி டி.வி.சானல்களுக்கு அளித்த பேட்டியில், அரசியலமைப்பு சீர்திருத்தம் செய்ய வேண்டியுள்ளதாலும், நாட்டின் நலன் கருதியும் அமைச்சரவை கலைக்கப்படுவதா தெரிவித்தார். சமீப காலமாக கிலானியின் அமைச்சரவை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் இவரது அமைச்சரவையில் 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருந்ததாக கூறப்பட்டது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பின்னணியில் தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
Leave a Reply