அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்

posted in: உலகம் | 0

லண்டன்:குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), “ஜங்க் புட்’ குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஜங்க் புட்’ எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது. நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது.அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது. இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.
இதுகுறித்து நார்த்ஸ்டோன் கூறியதாவது:பிரிட்டனில் குழந்தைகள், மோசமான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகளவில் உள்ள உணவுகளை மட்டுமே பெருமளவில் உண்பதால், எட்டரை வயதில் அவர்களின் நுண்ணறிவுத் திறனில் பெரும் குறைபாடு நிகழ்கிறது.ஆனால், ஆரோக்கியமான உணவு முறை, நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கிறது. இந்த வயதில், நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுத்தால் அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.இவ்வாறு நார்த்ஸ்டோன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *