லங்கா ஈ நிவ்ஸ் இணையத்தளம் தாக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்களால் இந்த கேள்வி எழுப்பட்ட போதும், பேச்சாளர் மாட்சின் சினர்ஸ்கீ இதற்கான உரிய பதிலை முன்வைக்கவில்லை என இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையின் லங்கா ஈ நிவ்ஸ்.கொம் இணையத்தளம் தீமூட்டப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையாதா? அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அல்லது ஐக்கிய நாடுகள் சபை எந்த கருத்தையும் முன்வைக்கவில்லையே என கேள்வி எழுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் பான் கீ மூன் இன்னும் அறியவில்லை எனவும், தேடி அறிந்தப் பின்னர் பதில் கூறுவதாகவும் மார்டின் நெசர்க்கி பதில் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் உலகமே அறிந்துள்ள நிலையில், பொறுப்புள்ள பொது செயலாளர் அறியாதிருப்பது ஏன் என இன்னர் சிட்டி பிரஸ் விமர்சித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர், காணாமல் போன ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் அவருடைய மனைவி, ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளமை குறித்து இன்னர் சிட்டி பிரஸ் நேற்றைய சந்திப்பின் போது கேள்வி எழுப்பியது. எனினும் அதற்கு பதில் வழங்கிய பேச்சாளர் நெசர்க்கி இந்த கோரிக்கை மனு கையளிக்கப்பட்டமை குறி;த்து தமக்கு தெரிய வரவில்லை எனக் குறிப்பிட்டார்.
எனவே அது தொடர்பில் அறிந்தபின்னர் கருத்துக் கூறுவதாக நெசர்க்கி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் எக்னெலிகொட்வின் மனைவி கோரிக்கையை முன்வைத்தமையானது சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்த செய்தியாக உள்ள போது அந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்கு அது தெரியாமல் இருப்பது புதுமையானது என இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply