திண்டுக்கல் : வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்திலேயே புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என அக் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற புதிய நீதிக் கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி. சண்முகம் கூறியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் புதிய நீதிக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. புதிய நீதிக் கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள். வரும் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றிபெறும்.
பிப்ரவரி 27ம் தேதி வேலூரில் நடைபெற உள்ள புதிய நீதிக் கட்சியின் 3வது மாநில மாநாட்டில், திமுக தலைவர் கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருது வழங்கப்படும்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இந்தியாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Leave a Reply