டெல்லி :சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட’கிரின்’கார்களுக்கு பொது பட்ஜெட்டில் கூடுதல் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய ஆட்டோமொபைல் துறை உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.தனிநபர் வருமானம் உயர்வு,உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஏற்ற சந்தை தகவமைப்புகளால் இந்திய ஆட்டோமொபைல் துறை வேகமாக எழுச்சி கண்டு வருகிறது.
மேலும்,சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட கார்களை தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இதை ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் வரிச்சலுகைகள் அளிக்கவேண்டும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஆட்டோமொபைல் துறையின் வரி ஆலோசகர் சேத்தன் ககாரியா கூறியதாவது:
“சாலை கட்டமைப்பு வசதிகள்,கட்டுமானத் துறை வளர்ச்சி,போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றால்,இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை வளர்ந்த நாடுகளுடன் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியால்,சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதை தடுக்கும் வகையில்,கிரின் கார் என்று அழைக்கப்படும் மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ஹைபிரிட் கார்களை உற்பத்தி செய்ய கூடுதல் வரிச் சலுகைகளை வழங்க வேண்டும்.
மேலும்,எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களை இறக்குமதி செய்வதற்கும் முழு வரிச்சலுகை அளிக்க வேண்டும்.மேட்(எம்.ஏ.டி.,)வரிவிதிப்பு முறையிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும்.இதன்மூலம்,சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தலாம்,”என்று கூறினார்.
Leave a Reply