கான்பூர் ஐ.ஐ.டி. தயாரித்துள்ள சிம்ரன் திட்டத்திற்கு 2011 ரயில்வே பட்ஜெட்டில் அனுமதி கிடைத்துள்ளது.
சேட்டிலைட் இமேஜிங் பார் ரயில் நேவிகேஷன் என்று விரிவாக அழைக்கப்படும் சிம்ரன் திட்டம், ரயில்வே அமைச்சக அனுமதிக்காக பல ஆண்டுகள் காத்திருப்பில் இருந்தது. அந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது அது சரியாக எந்த இடத்தில் உள்ளது என்று மொபைல் போனிலோ அல்லது இணையதளத்திலோ பயணிகளால் பார்க்க முடியும்.
ஐ.ஐ.டி-கான்பூரின் 12 ரயில்வே திட்டங்களில் இந்த திட்டமும் ஒன்று. ஆனால் இந்த திட்டத்திற்கு உடனடியாக ரயில்வே அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளதை அடுத்து, ஒரே சமயத்தில் 10,௦௦௦000 ரயில்களில் நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது அமலானவுடன் பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயிலின் சரியான இருப்பிடத்தை அறியலாம்.
Leave a Reply