வாஷிங்டன்: டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப்பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது.
அமெரிக்க விண்வெளி நிலையமாகன நாசா , தனது டிஸ்கவரி எனும் விண்கலத்தினை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை 38 முறை அனுப்பி பல்வேறுநாட்டு விண்வெளி வீரர்களை தாங்கி அனுப்பி வைத்தது. தற்போது கடைசியாக நேற்று 6 விண்வெளிவீரர்களுடன் டிஸ்கவரி விண்கலம் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து மாலை 4.50 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீறிப்பாய்ந்தது. டிஸ்கரி விண்கலத்தின் கடைசிப்பயணமாகும். மொத்தம் 39 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 352 நாட்கள் விண்வெளியில் வலம் வந்துள்ளது. 246 விண்வெளி வீரர்கள் டிஸ்கரி விண்கலத்தில் பயணித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து நாசா விண்வெளி மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் டிஸ்கரி விண்கலம் செலுத்தப்படவிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. தற்போது சரி செய்யப்பட்டு்ள்ளது. 11 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் சென்ற டிஸ்கரி விண்கலம் தனது கடைசி பயணத்தினை நிறைவு செய்கிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Leave a Reply