சென்னை:இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண, உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, 50 சதவீத சிறப்பு தள்ளுபடியை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதையொட்டி, கிரிக்கெட் போட்டிகளை காண, விமானத்தில், ‘எகனாமி’ வகுப்பில் அடிப்படை ஒருவழி உள்நாட்டுப் பயணம் செல்லும் பயணிகளுக்கு, 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும்.இந்த திட்டத்தில் டிக்கெட் வாங்கும் போது எரிபொருள் கட்டணம், பயணிகள் சேவை கட்டணம், பயன்படுத்துவோர் மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றுக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும்.வரும் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை இந்த சலுகை கட்டணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply