கேட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல் என்பது புகழ்பெற்ற ஐ.ஐ.எம் -களில் இடம்பெறுவதற்கான ஒரு நுழைவு வாயிலாக இருக்கின்றன.
ஆனால் ஐ.ஐ.எம். என்பதையும் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்பதை மேலாண்மை படிப்பை விரும்பும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மாணவர்களை தேர்வு செய்யும் அடிப்படைகள் அனைத்து வணிகப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் மாணவர்களின் விருப்பங்களை பிரதானமாக தீர்மானிக்கின்றன. மிகக் குறைவான கேட் மதிப்பெண்கள் உடையவர்களுக்கு பொதுவாக அந்த மதிப்பெண்கள் உதவுவதில்லை. சில மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மேட் மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்தாலும், அந்த நிறுவனங்கள் கேட் மதிப்பெண்களை எடுத்துக்கொள்ளும் முறையில்தான் வகைப்படுத்தப்படுகின்றன.
இடம் கிடைத்தால்தான் கிடைக்கும் என்ற வகையில் பல மேலாண்மை கல்வி நிறுவனங்களும், எப்படியாவது நிச்சயம் கிடைத்துவிடும் என்ற வகையில் பல மேலாண்மை கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே ஒரு புத்திசாலி மாணவர் மேலாண்மை கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வதில் அறிவுப்பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கிறார்.
மேலாண்மை படிக்க விரும்பும் ஒரு மாணவர் குறைந்தபட்சம் 10 கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஐ.ஐ.எம் -களை தாண்டியும் பல சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே உங்களின் பார்வை விரிந்து இருக்க வேண்டும். உங்களின் பட்டமானது சிறப்பான வகையில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால் அங்கீகரிக்கப்படாத, அதேசமயம் சிறந்த மேலாண்மை கல்வியை வழங்கும் பல கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே கல்வி நிறுவனங்களை தேர்வுசெய்வது உங்கள் கையில்தான் உள்ளது. தேர்வுசெய்வதற்கு முன்பாக நன்கு ஆய்வு செய்யவும்.
உங்களின் திறமைகளை சீரியமுறையில் மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப மேலாண்மை கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும். உங்களின் நண்பர் அல்லது உறவினர் படிக்கிறார் என்பதற்காக ஒரு கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டாம். உங்களுக்கு எந்த கல்வி நிறுவனம் ஒத்துவருமோ, அதை தேர்ந்தெடுத்து திறமையாக படித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
Leave a Reply