சி்ந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம்: இந்தியா-பாக்.இடையே சிண்டு மூட்டும் அமெரிக்கா

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: சிந்து நதியின் குறுக்கே இந்தியா தடுப்பணை கட்டி வருவதாகவும், இதன் மூலம் இந்தியா-பாகி்ஸ்தானி‌‌டையேயான சிந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தினை இந்தியா மீறிவிட்டதாக அமெரிக்க அளித்த அறிக்கையினை மேற்கோள்காட்டி பாகி்ஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிக்கை இந்தியா-பாகிஸ்தானிடையே பிரச்னையை மேலும் பெரிதாக்குவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தானிடையே வற்றாத ஜீவ நதியாக உள்ளது சிந்து நதி. இருநாடுகளுக்கும் பொதுவாக இந்த நதி இருந்து வருகிறது. இருநாடுகளும் பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 1960ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி நிதிநீர‌ை பங்கீட்டு கொள்வதென ஒப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப்கான், இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரிடையே கையெழுத்தானது. இந்நிலையில் அமெரிக்கா பார்லிமென்ட்டான செனட் சபையில் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் டெக்மினா ஜான்ஜூவா தாக்கல் செய்த அறிக்கையில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிடையே நதிநீர் பிரச்னையை ஏற்படுத்த சி்ந்துநதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறி இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தடுப்பணைகட்டி வருவதாக கூறிய அறிக்கை வெளியி்ட்டுள்ளது. மேலும் வெளியுறவுத்துறை கமிட்டியின் தலைவர் ஜான்கெர்ரி கூறுகையில், சிந்துநதியின் இந்தியா ஒரு சிறிய அணைகட்டினால் அது பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தும் என்னறார். இப்படி அமெரிக்காவின் அறிக்கையினை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் , இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. நிரந்தரமாக போடப்பட்ட இந்த ஒப்பந்தத்‌தினை இந்தியா மீறுவதாகவும் அமெரிக்கா குறைகூறி வருகிறது. பாகிஸ்தானின் மி்ன்சக்திக்கும், விவசாயத்திற்கும் இந்த நதியினை நம்பியுள்ளதாவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தானிடையே பிரச்னையை மேலும் பெரிதாக்க நதிநீர்பங்கீட்டு ஒப்பந்தத்தினை கையில் எடுத்து அமெரிக்கா சீண்டு மூட்டி விடுவாதக புகார் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *