தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத் தான் ஈரானின் போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.
ஈரானின் இரு போர் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து மத்தியத் தரைக் கடல் வழியாக சிரியா சென்றது. ஈரானின் போர் கப்பல்கள் 1979 ஆம் ஆண்டு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு குறைந்த காலம் கடந்து செல்ல எகிப்து அனுமதியளித்து உள்ளதாக ஈரானின் தூதரக பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கிறார்.
இதனைக் குறித்து தனது கேபினட் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத் தான் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என கவலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மன், ஈரானின் இச்செயல் கோபத்தை தூண்டுவதாகும் என தெரிவித்துள்ளார். எகிப்தில் சமீபத்தில் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்டதில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பெரும் பங்கு வகித்தது.
இவ்வியக்கம் ஈரானுடன் நெருக்கமானது. எனவே இது நிகழ்ந்திருக்கலாம் என இஸ்ரேலிய அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் பிலிப் குரோவ்லே கூறுகையில்,”இதை அத்து மீறிய செயலாகவே கருதுகிறோம். இதனால் அக்கப்பல்கள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை எச்சரிக்கையோடு கவனித்து வருகிறோம்” என்றார்.
Leave a Reply