தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை-கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று இரவு சென்னையில் நடந்தது. எந்த முடிவும் எடுக்கப்படாமலே இந்தப் பேச்சு முடிவுக்கு வந்துவிட்டது.

இரு கட்சிகளின் குழுவினரும் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு கலைந்த பிறகு இரவு 10.05 மணிக்கு அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியே வந்த முதல்வர் கருணாநிதி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் தந்த பதில்களும்:

கேள்வி: திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

முதல்வர்: மூன்றாவது கட்டத்துக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கேள்வி: தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதா?

முதல்வர்: இழுபறி ஒன்றுமில்லை.

கேள்வி: காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை எதிர்பார்க்கிறது?

பதில்: 234 தொகுதிகள் (சிரித்தபடி)

கேள்வி: ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் இருப்பதாலேயே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதா?

முதல்வர்: அது உங்களுடைய (செய்தியாளர்கள்) கற்பனை.

கேள்வி: அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும்?

முதல்வர்: இரண்டு நாட்களில் நடக்கும்.

கேள்வி: தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸிடம் ஏதேனும் புதிய திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளீர்களா?

முதல்வர்: அது ரகசியமானது.

டெல்லியில் பேசி முடிக்கலாம் – கருணாநிதி

பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுத்துக் கொண்டே போவது, தங்கள் தேர்தல் திட்டங்களில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் பெரும் கடுப்போடு உள்ளது திமுக. எனவே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இனி டெல்லியில் பேசிக் கொள்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *