மதுரை : டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் (டிகேஎம்) நிறுவனம் ‘அனாமலைஸ் டொயட்டோ’ என்ற பெயரில் முதல் டீலர்ஷிப்பை துவக்கியுள்ளது.
இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. அதிலும், குறிப்பாக எடியோஸ் வகை கார்கள் இளைய தலைமுறையினரை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், தென் மாநிலங்களில் வர்த்தகத்தை அதிகரிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, திருநெல்வேலியில் புதிதாக டீலர்ஷிப்பை துவக்கியுள்ளோம். இது, தமிழ்நாட்டின் தங்களது நான்காவது டீலர்ஷிப் ஆகும். தென் தமிழகத்தில், மதுரை டீலர்ஷிப், தங்களுக்கு சிறந்த அளவில் உதவி புரிந்து வருகிறது. விரைவில் புதிய டீலர்ஷிப்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply