மும்பை : இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசிஎஸ்), இந்தாண்டில், அதிகளவில் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டில், அதிகளவிலான பொறியியல் பட்டதாரிகளை, தங்களது நிறவனம் பணிக்கு அமர்த்த திட்டமி்ட்டுள்ளது. இதன்படி, சமீபத்தில் பொறியியல் படிப்பு முடித்த நல்ல மதிப்பெண்கள் கொண்ட மாணவர்கள், நேரடியாக, தங்கள் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த நடைமுறைப்படி, , சிறந்த கல்லூரிகளில் படித்து 70 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே, தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். தற்போது, அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. எந்த கல்லூரியில் படித்திருந்தாலும் சரி, நல்ல மதிப்பெண்ணுடன் கூடிய பட்டதாரிகள், நேரடியாக தங்கள் நிறுவன நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில், மட்டும் 37,000 பட்டதாரிகளுக்கு தங்கள் நிறுவனத்தில் பணிவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை , 23,500 பேருக்கு பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply