சிங்கப்பூர் : எகிப்தில் தொடங்கி அல்ஜீரியா, டுனீசியா, பஹ்ரைன்
, லிபியா என அடுத்தடுத்து சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக வெடித்து வரும் புரட்சியின் தாக்கம், கச்சா எண்ணெய் சந்தையிலும், பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது.
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு 100 அமெரிக்க டாலர்களுக்கு மேல் விற்பனையாகிறது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஏப்ரல் டெலிவரிக்கான விலை 1 சென்டு அதிகரித்து 99.10 அமெரிக்க டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய் ஏப்ரல் டெலிவரிக்கான விலை 85 சென்டுகள் அதிகரித்து 112.10 அமெரிக்க டாலராக இருந்தது.
Leave a Reply