சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வு இன்றுகாலை தொடங்கியது.
பிளஸ்டூ பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் அறிவியல் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கின.
இந்த தேர்வை மொத்தம் 5.52 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதற்காக 1890 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அங்கு இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்.
பிப்ரவரி 23ம் தேதிக்குள் தேர்வுகள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply