சர்வதேச மகளிர் தினம், மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்று பெண்களை கவுரவிக்கும் வகையிலும், சிவில் விமான போக்குவரத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, பெண் பயணிகளுக்கு விசேஷ சலுகையை அறிவித்துள்ளது.
மார்ச் 8-ந் தேதி, ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் எக்கனாமி வகுப்பில் வெறும் 99 ரூபாய் (வரிகள் தனி) கட்டணத்தில் பெண்கள் பயணம் செய்யலாம்.
எக்சிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.1,199 (வரிகள் தனி) ஆகும். இந்த கட்டணத்தில் இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
இதற்கான டிக்கெட்டுகளை, ஏர் இந்தியா அலுவலகங்களிலோ, அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜெண்டுகளிடமோ மட்டுமே பெற வேண்டும் என்று ஏர் இந்தியா கூறியுள்ளது.
Leave a Reply