முதல்முறையாக 150 ரூபாய் நாணயம் வெளியாகிறது!

posted in: மற்றவை | 0

டெல்லி: இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல்முறையாக, 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.

வருமான வரித்துறை தொடங்கப்பட்டு, 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது.

வருகிற 28-ந் தேதி, பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த நாணயத்தை வெளியிடுகிறார்.

இந்த நாணயம், வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம், ‘சத்யமேவ ஜெயதே’, ‘இந்தியா’ ஆகிய வார்த்தைகளுடன் சர்வதேச வடிவமைப்பு கொண்டதாக இருக்கும். பின்பக்கத்தில், சாணக்கியர் படமும், தேனீயுடன் தாமரை மலர் படமும் இடம்பெற்று இருக்கும். 150 ரூபாய் மதிப்புள்ள 200 நாணயங்கள் அச்சிட்டு வெளியிடப்படும்.

மேலும், வருமான வரித்துறையின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் நிறைவடையும்போது, 5 ரூபாய் மதிப்புள்ள 100 சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படும். நாணயங்களும், 150 ரூபாய் நாணய வடிவமைப்பிலேயே, ஆனால் சற்று சிறியதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *