மாஸ்கோ: விண்வெளிக்கு சென்ற உலகின் முதல் விண்வெளி வீரரின் இளைய மகள் தனது தந்தையின் பெயரை வர்த்தக குறியீடாக பதிவ செய்யக்கோரி மனு செய்துள்ளார்.
உலகின் முதன் முதலாக விண்வெளிக்கு சென்ற மனிதன் என்ற பெருமையினை ரஷ்யாவின் யூரிகாகரின் (77) பெற்றுள்ளார் . இவர் வோஸ்டாக்-1 விண்கலம் மூலம் கடந்த 1961-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் ஆண்டு விண்வெளியினை 90 நிமிடங்கள் வட்டமடித்து பார்த்துவிட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பினார். விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். இவர் கடந்த 1968-ம் ஆண்டு மார்ச் 27-ல் இறந்தார். இந்நிலையில் விண்வெளிக்கு மனிதன் சென்றதன் 50-ம் ஆண்டு விழாவை வரும் ஏப்ரல் மாதம் ரஷ்யா கொண்டாவுள்ளது. ரஷ்யாவில் காகரில் பெயரில் உள்ள எந்த பொருட்களும் மிகவும் பிரபலம். வருடத்தில் 33 மில்லியன் டாலர் அளவுக்கு காகரின் பெயரில் உள்ள பொருட்களுக்கு வர்த்தகம் நடப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே இவரது இளைய மகள் யூலியா காகரின் (50) என்பவர் , ரஷ்யாவின் காப்புரிமை மற்றும் அத்தியாவசிய சொத்துக்கள் பாதுகாப்பு சேவை கூட்டமைப்பிற்கு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது தந்தை , யூரி அலெக்ஸ்சியாச் காகரின் எனும் பெயரில் வர்த்தக குறியீடு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், காகரில் பெயரை பலர் வர்த்தக குறியீடாக பயன்படுத்தி வருமானம் பார்க்கின்றனர். ஆனால் இவரது சொந்த மகள் காகரின் பெயரை வர்த்தக குறியீடாக ஏன் பயன்படுத்த பதிவு செய்யக்கூடாது? என்றார்.
Leave a Reply