ரயில்வே பட்ஜெட்-தமிழகத்திற்கு 2 துரந்தோ ரயில்கள் அறிமுகம்-பயணிகள் கட்டணம் உயரவில்லை

posted in: அரசியல் | 0

டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இன்று 2011-12ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் டைத் தாக்கல் செய்தார். இதில் 8வது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

முன்பதிவு கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 2 துரந்தோ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்திற்கு எக்கச்சக்கம்!

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் கொண்டு தனது சொந்த மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி விட்டார் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி.

கொல்கத்தா புறநகர் ரயில் சேவைக்கு புதிதாக 50 ரயில்கள், மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு தாராள நிதி ஒதுக்கீடு, சிங்கூர், நந்திகிராமில் புதிய ரயில் பெட்டித் தொழிற்சாலைகள் என தாராளமாக திட்டங்களை அறிவித்துள்ளார் மமதா.

ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்:

ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 57,630 கோடி ஒதுக்கீடு

– ரயில்வே துறைக்கான பட்ஜெட் ரூ. 57,630 கோடி. இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய நிதி ஒதுக்கீடு இது.
– சோனியாவின் ரேபரேலி தொகுதியில் ரயில் பெட்டி ஆலை
– மேற்கு வங்கம்-சிங்கூரில் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை
– மேற்கு வங்கம்-நந்திகிராமில் ரயில்வே தொழில்நுட்ப்ப பூங்கா
– பெரம்பூர் ஐசிஎப் ஆலையில் 2 உற்பத்திப் பிரிவு
– ஒரிசாவில் சரக்குப் பெட்டி தயாரிப்பு ஆலை
– கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை
– மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு விரைவில் ரயில் பாதை
– வட கிழக்கு மாநிலங்கள் ரயில் மூலம் இணைப்பு
– 2011-12ல் 180 கிலோமீட்டர் ரயில் பாதை அதிகரிப்பு

வீடில்லாத ஏழைகளுக்கு 10,000 வீடுகள்:

– வீடில்லாதவர்களுக்கு அடைக்கலம் தர 10,000 குடியிருப்புகள்
– ரயில்வேக்கு நிதி திரட்ட ரூ. 10,000 கோடிக்கு கடன் பத்திரங்கள்
– பாலக்காட்டில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை
– ஜம்மு காஷ்மீரில் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை
– அனைத்து ரயில்களிலும் விபத்து தடுப்பு கருவிகள் பொருத்தப்படும்
– மகாராஷ்டிராவில் எரிவாயுவில் இயங்கும் மின்சார நிலையம்
– டார்ஜீலிங்கில் புதிய சாப்ட்வேர் தயாரிப்பு மையம்
– பயணிகள் பெட்டிகள் உள்ளிட்டவை வாங்க ரூ. 13,824 கோடி
– புதிய ரயில் பாதை அமைப்புப் பணிகளுக்கு ரூ. 9853 கோடி
– தனியார் துறையுடன் இணைந்து 85 புதிய திட்டங்கள்
– சிறப்பாக செயல்படும் ரயில்வே கோட்டங்களுக்கு ஊக்கத் தொகை
– சிறப்பாக செயல்படும் கோட்டங்களுக்கு 2 புது ரயில்கள், திட்டங்கள் அளிக்கப்படும்

442 புதிய ரயில் நிலையங்கள்:

– நாடு முழுவதும் 442 புதிய ரயில் நிலையங்கள்
– மெட்ரோ, நீண்ட தூர ரயில்களில் கோ இந்தியா ஸ்மார்ட் கார்டு அறிமுகம்
– சரக்கு முனையங்கள் அமைக்க 12,000 ஏக்கர் நிலம்
– மேற்கு, கிழக்குப் பிராந்தியத்தில் பிரத்யேக சரக்கு முனையங்கள்
– உடல் ஊனமுற்றோருக்கு ரயில்களில் கூடுதல் வசதிகள்
– புதிய ஏசி வகுப்புகள் விரைவில் அஏறிமுகம்
– கூலிகள், கேங்மேன்களின் குடும்பத்தினருக்கு வேலை
– ரயில்வே கூலிகளின் பணிப்பளுவைக் குறைக்க டிராலி சேவை அதிகரிப்பு
– ரயில் பாதைகள் மாற்றியமைப்பு மூலம் ரூ. 300 கோடி சேமிப்பு
– 16,000 முன்னாள் ராணுவத்தினருக்கு ரயில்வேயில் பணி
– ரயில்வே காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்
– விளையாட்டு வீரர்களுக்கு புதிய சலுகைகள்
– வங்கதேசத்துடன் கலாச்சாரப் பரிமாற்ற திட்டம்

முன்பதிவுக் கட்டணம் பாதியாக குறைப்பு:

– ரயில் முன்பதிவுக் கட்டணம் பாதியாக குறைப்பு
– ஏசி அல்லாத வகுப்புகளுக்கான முன்பதிவுக் கட்டணம் ரூ. 10 குறைப்பு
– ஏசி பெட்டிகளுக்கான முன்பதிவுக் கட்டணம் ரூ. 5 குறைப்பு
– 17 ரயில்களின் சேவை அதிகரிக்கப்படும்
– கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படும்

சென்னைக்கு 9 புதிய புறநகர் ரயில்கள்:

– சென்னைக்கு 9 புதிய புறநகர் ரயில்கள்
– கொல்கத்தாவுக்கு 50 புதிய புறநகர் ரயில் சேவை
– மூத்த குடிமக்களுக்கான சலுகை-பெண்களின் வயது 58 ஆக குறைப்பு
– பத்திரிக்கையாளர்கள் 50 சதவீத சலுகைக் கட்டணத்தில் வருடத்திற்கு 2 முறை பயணம் செய்ய சலுகை

தமிழகத்திற்கு2 துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள்:

– சென்னை-மதுரைக்கு புதிய துரந்தோ எக்ஸ்பிரஸ் அறிமுகம்
– கன்னியாகுமரி-திருவனந்தபுரம்-திப்ரூகர் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்
– சென்னை- புதுச்சேரி -மதுரை-எர்ணாகுளம் புதிய ரயில்
– சென்னை-மதுரை-திருவனந்தபுரம் இடையே புதிய துரந்தோ எக்ஸ்பிரஸ்
– காரக்பூர்-வேலூர்-விழுப்புரம் புதிய ரயில்
– சென்னை-மைசூர் புதிய எக்ஸ்பிரஸ்
– தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயில்
– நர்சபூர்-நாகர்கோவில் புதிய ரயில்
– நாகர்கோவில்-கொல்லம் புதிய ரயில்
– தர்மபுரி-பங்காருப்பேட்டை-பெங்களூர் புதிய ரயில்

3 புதிய சதாப்தி ரயில்கள்:

– 3 புதிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்
– 2 புதிய ஏசி டபுள் டெக்கர் ரயில்கள் அறிமுகம்
– திருப்பதி -காஞ்சிபுரம் புதிய ரயில் பாதை
– மன்னார்குடி-புதுக்கோட்டைக்குப் புதிய ரயில் பாதை
– கூடுவாஞ்சேரி-ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் பாதை
– நாகர்கோவில்-திருவனந்தபுரம் பாசஞ்சர் கொச்சுவேலி வரை நீட்டிப்பு

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள துரந்தோ ரயில்கள்:

அலகாபாத்-மும்பை
புனே-அகமதாபாத்
சியால்தா-பூரி
செகந்திராபாத்-விசாகப்பட்டனம்
மதுரை-சென்னை
திருவனந்தபுரம்-மதுரை-சென்னை
மும்பை-டெல்லி
டெல்லி-அஜ்மீர்

புதிய டபுள் டெக்கர் ஏசி ரயில்கள்:

டெல்லி-ஜெய்ப்பூர்
அகமதாபாத்-மும்பை
மும்பை-ஹவுரா (4 நாள்)
சியால்தா-டெல்லி (5 நாள்)
நாக்பூர்-மும்பை (5 நாள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *