டெல்லி: வாடிக்கையாளர் திருப்தியில் நானோ கார் கடைசி இடத்தை பெற்றுள்ளதாக டிஎன்எஸ் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரத்தக துறை குறித்த ஆய்வறிக்கை வெளியிடுவதில் டிஎன்எஸ் குளோபல் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம்,சிறிய ரக கார்களின் வாடிக்கையாளர்கள் திருப்தி குறித்து விரிவான ஆய்வு நடத்தியது. காரின் பெர்மான்ஸ்,பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாடு முழுவதும் 9,300 வாடிக்கையாளர்களிடம் கேட்டறியப்பட்டது.
இதில், பல்வேறு பிரிவுகளில் கீழ் வாடிக்கையாளர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் புள்ளிகள் கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கார்களின் தரவரிசையை டிஎன்எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், 91புள்ளிகள் பெற்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்ட்டோ கார் முதலிடம் பெற்றுள்ளது.
இந்த தரவரிசை பட்டியலில் 70புள்ளிகள் பெற்ற டாடாவின் நானோ காருக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வரும் நானோ காருக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,இந்த தரவரிசை பட்டியலில் மாருதி நிறுவனத்தின் இதர ஹேட்ச்பேக் கார்களான ஜென், எஸ்டிலோ மற்றும் ஏ-ஸ்டார் கார்களும் வாடிக்கையாளர் திருப்தியில் முன்னிலை வகிக்கின்றன.
பெரிய ரக ஹேட்ச்பேக் கார் வரிசையில் வோக்ஸ்வேகனின் போலோவும், மாருதியின் ஸ்விப்ட் காரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தியாவில் கார் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் விலையை பற்றி கவலைப்படாமல், அதிக வசதிகள் நிறைந்த காரை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply