கொழும்பு: இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
“இலங்கையில் விடுதலைப் புலிகளால் இனி வெளிப்படையாகவோ அல்லது ராணுவ ரீதியாகவோ செயல்பட முடியாது என்று நான் உறுதியாக நம்பவில்லை. வடக்குப் பகுதியில் அவர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
ராணுவ ரீதியாக என்றில்லை, அரசியல் கட்சிகள் மூலமாகவும் புலிகள் தங்கள் பலத்தை காட்ட முயற்சி செய்யலாம்”, என்று டக்ளஸ் கூறியுள்ளார்.
ஈபிடிபி கட்சித் தலைவரான டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் காபினெட் அமைச்சராக உள்ளார்.
Leave a Reply