புதுடில்லி : “வெங்காயம் உள்ளிட்ட, ஒரு சில காய்கறிகளின்
விலை, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. இதற்காக, விவசாயிகளிடம் இருந்து, சம்பந்தப்பட்ட காய்கறிகளை, அரசு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது’ என, விவசாய அமைச்சர் சரத் பவார் கூறினார்.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறியதாவது:வெங்காயம் உள்ளிட்ட, ஒரு சில காய்கறிகளின் விலை, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது தான். கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த பலத்த மழை காரணமாகவே, இந்த விலை உயர்வு ஏற்பட்டது.விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, காய்கறிகளை, விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என, சிலர் கூறுகின்றனர். காய்கறி, பழ வகைகள் போன்ற அழுகக்கூடிய பொருட்கள் தொடர்பான விஷயத்தில், சில வரன்முறைகள் உள்ளன.இருந்தாலும், காய்கறிகளின் விலை உயர்வை கட்டுக்குள் வைக்கும் வகையில், அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு சரத் பவார் கூறினார்.
Leave a Reply