டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனது பெயரையும் சேர்க்கக் கோரி டெல்லி கோர்ட்டில் வாதாடிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்கு, முதல்வர் கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
24 மணி நேரத்திற்குள் தனது புகாருக்கு சாமி மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் அதில் கூறியுள்ளார்.
நேற்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடிய சாமி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதல்வர் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. எனவே அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதை விசாரித்த கோர்ட், விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாகவே தற்போது சாமிக்கு முதல்வர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Leave a Reply