சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் நடைபெற்ற சமயம் ப.சிதம்பரம்தான் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, நிதியமைச்சரிடம் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுத்திருக்க வேண்டும்.
எனவே மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்றார்.
Leave a Reply