24 ஆடம்பர அரண்மனைகள் வாங்கிக் குவித்ததாக புதின், மெத்வதேவ் மீது புகார்

posted in: உலகம் | 0

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவும், பிரதமர் புதினும் சேர்ந்து 24 ஆடம்பர அரண்மனைகளை வாங்கிக் குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிபரும், பிரதமருமாகச் சேர்ந்து 24 இடங்களில் ஆடம்பர ரகசிய அரண்மனைகள் வாங்கி உள்ளனர். அதில் 6 அரண்மனைகள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவுடையது என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ரஷ்ய பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன.

இது மட்டுமி்ல்லாமல் புதினுக்கு கருங்கடல் பகுதியில் ரூ.420 கோடி மதிப்புள்ள சொகுசு அரண்மனை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பத்திரிக்கை ஆடம்பர அரண்மனைகள் தவிர புதினும், மெத்வதேவும் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றி ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இருவருக்கும் சொந்தமான அரண்மனைகளின் புகைப்படங்கள் கடந்த மாதம் இணையதளத்திலும், பத்திரிக்கைகளிலும் வெளிவந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை புதினின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *