ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக சார்பில் சீட் கேட்டு கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலதிபர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அதிமுகவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். 52 வயதான இவர் நகைக் கடை அதிபராவார். இவர் அதிமுக சார்பில் சீட் கேட்டிருந்தார். ராஜபாளையம் தொகுதிக்கு இவர் சீட் கேட்டிருந்தார். நீண்ட அதிமுககாரரான தனக்கு எப்படியும் சீட் கிடைத்து விடும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தார் துரைப்பாண்டியன். மேலும் கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளில் இருந்ததால் நிச்சயம் சீட் உறுதி என்றும் நம்பியிருந்தார்.
இந்த நிலையில் ராஜபாளையத்திற்கு வேறு வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படவே மனம் உடைந்தார் துரைப்பாண்டியன். வேட்பாளர் பட்டியல் வெளியான அன்று இரவு முழுவதும் தூங்காமல் மன வலியுடன் தவித்தவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே பரிதாபமாக உயிரிழந்தார்.
சீட் கேட்டு கிடைக்காத அதிர்ச்சியில் துரைப்பாண்டியன் இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிமுகவினரை கலங்கடித்துள்ளது.
Leave a Reply