மதுரை: அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக விஜய்காந்த் இதுவரை வாய் திறக்கவில்லை, பொறுத்திருந்து பாருங்கள் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
மதுரையில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜமாணிக்கத்தின் மனைவி ராணி தலைமையில் மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 300க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர்.
அழகிரியின் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதன் பிறகு அழகிரி அளித்த பேட்டி:
கேள்வி: அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததால் அந்தக் கூட்டணி பலமாகிவிட்டதே?
அழகிரி: விஜயகாந்த் எனது நண்பர், தன்மானம் மிக்கவர். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக அவர் இதுவரை வாய் திறக்கவில்லையே. பொறுத்திருந்து பாருங்கள்.
கேள்வி: உங்கள் பெயரில் 20 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடக் கோரி விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்களே?
அழகிரி: அதற்காக நான் என்ன 20 தொகுதிகளிலா போட்டியிட முடியும்?
கேள்வி: வரும் சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்?
அழகிரி: மே 13ம் தேதிக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மே 13க்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது.
ச்ச்
ஹி ஹி!