சென்னை: ஆண்களும், பெண்களும் சரி சமமானவர்கள். யாருக்கும், யாரும் அடிமை இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கை:
வாழ்வில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் சிறந்த பகுதியினராக வருணிக்கப்படுகிறார்கள். தாயாகவும், தாரமாகவும், அக்காள் – தங்கையாகவும் இருந்து தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக இருந்து தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளுகிறார்கள். மனித இனம் தொடர்வதற்குத் தாய்மார்களே காரணம். அவர்களின் நலனை பேணுகிற வகையில் கொண்டாடப்படுவதே இன்றைய உலக மகளிர் தினம்.
ஆண்களுக்கும் பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருபாலாரும் ஒரு சேர நண்பர்கள் போல இருக்க வேண்டும் என்பதே திருவள்ளுவர் காட்டும் வழியாகும். ஆண், பெண் உறவு நட்பின் அடிப்படையில் அமைகிறபோது, வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். கைகோர்த்துக் கொண்டு பணியாற்றுவதினாலேயே திருமணங்களில் கூட, கைகோர்த்துக் கொண்டு சுற்றிவரச் சொல்கிறோம்.
இந்த உயரிய மரபுக்கேற்ப அரசியலிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமுதாய ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும். கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்றவற்றில் பெண்கள் இன்னும் சமநிலை அடையவில்லை. சமஅந்தஸ்து, சமவாய்ப்பு, சமநீதி பெண்களுக்கும் கிடைக்கும் வகையில் அதிக அக்கறை செலுத்த இந்த மகளிர் தினம் பயன்படட்டும் என்று கூறி இந்த தினத்தில் மகளிர் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ, தே.மு.தி.க. சார்பில் இதயமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
jayasuraya
1.ஒன்றுபட்ட கூட்டு குடும்பம் சிதைந்து மனிதர்களை நேசிக்கும் மனோபாவமும் குறைந்து விட்டது. நானும் சம்பாதிக்கிறேன்: நீயும் சம்பாதிக்கிறாய். உனக்கு நான் ஏன் கட்டுப்பட வேண்டும். உன் பேச்சை நான் எதற்கு கேட்க வேண்டும் என்ற ஈகோ.
2.நமது நாட்டிலும் விவாகரத்து தினம் தினம் அதிகரித்து வருவது பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு.நம் நாட்டில் ஆண்டுக்கு 76,000 பொய்க் கேசுகள் (498A) போடப்பட்டு ஒரு பாவமும் அறியாத வயதான தாய்மார்களும் இளம் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
3.கடமைகளை செய்யாமல் உரிமைகளை மட்டும் கோரும் பெண்ணியவாத குள்ளநரிகளின் கோர கரங்களில் இருந்து தேச பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.நாட்டில் கடமைகளை செய்ய மட்டுமே ஆண் வர்க்கம், உரிமைகளை பெற பெண் வர்க்கம் என்னும் அக்கிரமங்கள் அரங்கேற்றப்படுகிறது.
4.கற்பை கல்லூரிகளிலும், கடைதெருக்களிலும் விற்கும் பொருளாக அல்லது இலவசமாக பரிமாறும் பொருளாக எண்ணி தறி கேட்டு வாழும் தரம் கெட்ட பெண்கள்
5கள்ளக்காதல் விவகாரத்தில் இந்திய no ;1இந்தியசட்டம் பல பெண்களுக்கு கள்ளக் காதலை வளர்த்துக் கொள்ள மிகவும் சாதகமாக இருந்து வருகிறது !6.இந்தியாவில் திருமணம் செய்தால் அரசாங்க ஆதரவுடன் கண்டிப்பாக ஒருநாள் பொய் வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது உறுதி. இதனை தடுக்க எந்தவித நச்சு முறிவு மருந்தும் இந்த உலகத்தில் கிடையாது!!
7.ஆண்கள் பயிலும் பள்ளிகளைவிட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதிஉதவி இந்தியசட்டம் ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதால்
8.இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள்.
9.ஒரு ஆண் தனக்கு நேரும் சங்கடங்களை, உடல்(sex), மன ரீதியான பாதிப்புகளை தயக்கத்தின் காரணமாக வெளியில் சொல்வதில்லை.இந்தியசட்டம் சட்டம் ஆண்கள் காலில் பூட்டப்பட்ட விலங்காக உள்ளது. ஆண்களுக்கு எதிராகப் பல விதிகள் .
10.இந்தியாவின் தேசிய நடைமுறை. இதற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்,கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனது கள்ளக்காதலன் மற்றும் தங்கையுடன் சேர்ந்து, கட்டிய கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த பெண்ணைப். …….,;;;;……,,,,..,–
இப்போதைய உடனடித் தேவை —
அனைத்து சட்டங்களும் உடனடி மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் போர்க்கால அடிப்படையில் இதிலுள்ள ஓட்டைகள் அடைக்கப் பட வேண்டும். இப்போது உள்ள சட்டங்களில் ஓட்டைகளால் தீவிரவாதத்தை போன்று இன்னும் பல மடங்கு சக்தி வாய்ந்த கலாசார சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை நடுவண்-மாநில அரசுகள் உடனுக்குடன் கவனித்த தீர்த்து வைக்க ஆவண செய்ய வேண்டும்.
ragu
நாங்கள் பெண்களை மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை, ஆண்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் பெண்களை காப்பாற்றும் சட்டம், ஆண்களையும் காப்பாற்ற வேண்டும்.
ragu
ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் காவல்துறையில் பிடித்து கொடுக்கிறார்கள். பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் இரக்கப்படுகிறார்கள். மணமேடையில் ஆண் தாலி கட்ட மறுத்தால் வரதட்சணை கொடுமை சட்டத்தில் கைது செய்கிறார்கள். மணமேடையில் பெண் வேறு ஒருவனோடு ஓடி போனால் விருப்பப்படி அவள் வாழலாம் என்று சொல்கிறார்கள்.