சிட்டகாங்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நேற்று தனது 2வது அவமானமகரமான தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து.
வங்கதேசத்திடம் அது 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று பெரும் தர்மசங்கடத்தை சந்தித்தது.
ஏற்கனவே தக்கனுக்கூண்டு அயர்லாந்திடம் அடி வாங்கி அவமானத்தை சந்தித்திருந்தது இங்கிலாந்து. இந்த நிலையில், நேற்று வங்கதேசத்துடன் அது மோதியது. இப்போட்டியில் வங்கதேச பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி 235 ரன்களில் இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தனர். இது இங்கிலாந்துக்கு வங்கதேசம் கொடுத்த முதல் அடி.
பின்னர் ஆட வந்த வங்கதேசம், ஆரம்பத்தில் தடுமாறினாலும் கூட கடைசி வரிசை ஆட்டக்காரர்கள் பிரமாதமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டதோடு, வெற்றிப் பாதைக்கும் இட்டுச் சென்று அபார சாதனை படைத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் தனது காலிறுதிக் கனவை உயிர்ப்பித்துள்ளது. அதேசமயம், இங்கிலாந்து மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Leave a Reply