நியூயார்க்: அமெரிக்காவுக்கு வேண்டுமானால் லிபிய அதிபர் கடாஃபியின் வெற்றி கசக்கலாம். ஆனால் எண்ணெய் சந்தையைப் பொறுத்தவரை இந்த வெற்றி ஒரு நிம்மதியைத் தந்துள்ளது.
லிபிய கலவரங்களால், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி நின்றுவிட, கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு பேரலுக்கு 113 டாலர் வரை உயர்ந்துவிட்டது.
ஆனால் இப்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. காரணம், லிபியாவில் கலவரக்காரர்கள் வசமிருந்த பகுதிகளை அதிபர் கடாஃபியின் படைகள் அதிரடியாக மீட்க ஆரம்பித்துள்ளதுதான். தலைநகர் ட்ரிபோலியைச் சுற்றியிருந்த பகுதிகளை முழுமையாக கடாஃபியின் படைகள் மீட்டுள்ளன.
மேலும் சில நகரங்களும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட, மீண்டும் எண்ணெய் உற்பத்தி வழக்கம்போல ஆரம்பித்துள்ளது. ஏற்றுமதியும் தொடரும் என்ற உறுதியான நிலை ஏற்பட்டுள்ளதால், இப்போது ஒரு பேரல் கச்சா 100 டாலராகக் குறைந்துள்ளது.
மேலும் உலகின் அதிக எண்ணெய் பயன்படுத்தும் நாடான ஜப்பான் நிலைகுலைந்து போயுள்ளதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
Leave a Reply