சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேற்று முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு பெறப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் 1600 பேர் மனு கொடுத்தனர். இன்று மதியம் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இன்று மாலை வரை மனுக்கள் பெறப்படும். பின்னர் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி மேலிடம் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலந்தூர் தொகுதியில் கார்த்தி சிதம்பரம், ஆர்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் போட்டியிட தொகுதி தலைவர் ஜெயசரவணன் விருப்ப மனு கொடுத்தார். தி.நகர், ஆலந்தூர், ஆவடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட செழியன் விருப்ப மனு கொடுத்தார். தி.நகர் தொகுதியில் போட்டியிட சித்ராகிருஷ்ணன் விருப்ப மனு கொடுத்தார். தி.நகர், மயிலாப்பூர் தொகுதிகளில் போட்டியிட சைதை ரவி மனு கொடுத்தார். அண்ணாநகர் தொகுதிக்கு ராம்குமார், திரு.வி.க. நகர் தொகுதிக்கு அசோக் ராஜா, நிலவன், மதுராந் தகம் தொகுதிக்கு சேத்துப்பட்டு ரமேஷ், கராத்தே செல்வம் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம் தொகுதிக்கு அருவிபாபு மனு கொடுத்தார். ஆம்பூர் தொகுதிக்கு ஹசீனா சையத், வக்கீல் நவாஸ், தவுலத்கான், எல்.கே.வெங்கட் ஆகியோர் மனு செய்தனர். பேராவூரணி தொகுதிக்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன், ஆவடி தொகுதிக்கு தளபதி பாஸ்கர், திருத்தணி தொகுதிக்கு தணிகைமணி ஆகியோர் மனு செய்தனர். குளச்சல் தொகுதிக்கு ராஜதுரை, சுயம்பு, பொன் ரத்னபாய் ஆகியோர் மனு கொடுத்தனர். விளவங்கோடு தொகுதிக்கு ரூபி மனோகரன், பிரின்ஸ் மனு கொடுத்தனர். ஓசூர் தொகுதிக்கு ரேஞ்சர் நாகராஜ் மனு கொடுத்தார்.
Leave a Reply