புதுல்லி : கார் தயாரிக்க பயன்படும் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்ததையடுத்து, கடந்த ஜனவரி மாதம் கார்களின் விலையை பல்வேறு நிறுவனங்கள் கணிசமாக உயர்த்தின. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் 2 சதவீதம் உயர்த்தியது. முன்பதிவு செய்து காத்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விலை உயர்வு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
Leave a Reply