டெல்லி: உற்பத்தி செலவீனம் அதிகரித்து வருவதையடுத்து, கார் ஆடியோ சிஸ்டத்தின் விலையை உயர்த்துவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
எவ்வளவு மதிப்புமிக்க காராக இருந்தாலும், அதில் பொருத்தப்படும் ஆடியோ சிஸ்டம், அந்த காரின் மதிப்பை மேலும் கூட்டுகிறது என்று கூறினால் மிகையாகாது.
இதனால், கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மியூசிக் சிஸ்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இந்நிலையில், மனம் விரும்பும் ஆடியோ சிஸ்டத்தை வாங்க வாடிக்கையாளர்கள் இனி அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கார் ஆடியோ சிஸ்டம் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருட்களான அலுமினியம் மற்றும் காப்பரின் விலை திடீரென உயர்ந்துள்ளது. இதுதவிர, மற்ற முக்கிய மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஆடியோ சிஸ்டம் தயாரிப்பதற்கான உற்பத்தி செலவீனம் திடீரென அதிகரித்துள்ளதால் ஆடியோ நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
உற்பத்தி செலவீனத்தை தாக்கு பிடிக்க முடியாத பல முன்னணி நிறுவனங்கள் விரைவில் ஆடியோ சிஸ்டங்களின் விலையை 6 முதல் 8 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதனால், புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மியூசிக் சிஸ்டத்திற்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
Leave a Reply