நாக்பூர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் என்றால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இதே போட்டியை நேரில் காண வாய்ப்பு கிடைக்கும்போது கூடுதல் மகிழச்சியை தரும் என்பதால் டிக்கெட் வாங்கிட விற்பனை துவக்க நாளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
டிக்கெட் பெறுவதற்காக நீண்ட நேரம் காத்துக்கிடந்து பின்னர் கிடைக்காமல் போகும் போது பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர். இதனால் ஆவேசம் அடையும் ரசிகர்களை போலீசார் தடியடி பிரயோகம் செய்ய வேண்டியிருக்கிறது.
பெங்களூருக்கு அடுத்தப்படியாக இன்று நாக்பூரில் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். வரும் 12 ம் தேதி நாக்பூரில் இபந்தியா- தென்ஆப்ரிக்கா மோதும் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை துவங்கியது. இரவு முதல் இங்கு கூட்டம், கூட்டமாக ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
விற்பனை துவங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட் முடிந்து விட்டது. இதனால் காத்துக்கிடந்த ரசிகர்கள் ஆவேசமுற்றனர். தொடர்ந்து கவுன்டர் நோக்கி முன்னேறி தள்ளு, முள்ளுவில் ஈடுபட்டனர். பலர் கிரிக்கெட் நடத்தும் அமைப்பினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் தடியடி பிரயோகித்து கூட்டத்தினரை கலைத்தனர்.
பெங்களூரூ தடியடி : பிளாக்கிலும், ஆன்லைனிலும் டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே கடந்த பிப் 24 ம் தேதி பெங்களூரூவில் இந்தியா- இங்கிலாந்து மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனையில் இது போன்று ரசிகர்கள் மீது தடியடி நடந்தது. இந்த சம்பவம் சர்வதேச கிரிக்கெட் ஆணையம் வரை புகார் செய்யப்பட்டது.
Leave a Reply