சுனாமியால் ஜப்பானுக்கு நஷ்டம் 309 பில்லியன் டாலர்

posted in: உலகம் | 0

டோக்யோ: சமீபத்திய பூகம்பம், அதனைத் தொடர்ந்த பயங்கர சுனாமி காரணமாக ஜப்பானுக்கு 309 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டமாகியுள்ளது.

உலகில் மிகக் காஸ்ட்லியான இயற்கைப் பேரழிவு இதுதான் என்கிறார்கள்.

பூகம்பம் மற்றும் சுனாமியால் உருக்குலைந்துபோன ஜப்பானின் சாலைகள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய மட்டுமே இந்த மொத்தப் பணமும் தேவைப்படுகிறது என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 0.5 சதவீதம் பின்னோக்கிப் போய்விட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த நஷ்டக் கணக்கில், மின்சார இழப்பு, அணுக்கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் எல்லாம் சேர்க்கப்படவில்லை. ஃபுகுஷிமா அணுசக்தி நிலையமே மூடப்படும் சூழல் உள்ளதால், நஷ்டத்தின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு இன்னும் அதிகம். டொயோட்டா நிறுவனம் முழுமையாக கார் உற்பத்தியையே நிறுத்தியுள்ளது. இதுவரை 140000 கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *