ஜப்பான்: 4வது அணு உலையில் பெரும் தீ; எந்நேரமும் வெடிக்கும் அபாயம்

posted in: உலகம் | 0

டோக்யோ: ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் பெரும் தீ ஏற்பட்டுள்ளதால், அது எந்நேரமும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து இந்த அணுசக்தி நிலையத்தின் ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான். பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இந்த மூன்று அணுஉலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முவுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணுஉலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன.

முதலில் அணு உலையிலிருந்து 20 கிமீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கிமீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது.

இதுவரை 11 லட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர்.

டோக்கியா வரை அணுக்கதிர் வீச்சு உணரப்பட்டுள்ளதாகவும், உடல் நலத்தைப் பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சின் அளவு அபாய கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அரசுத் தரப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்கதிர் வீச்சிலிருந்து தற்காலிகமாகக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

4வது அணு உலை…

இந்த நிலையில், ஃபுகுஷிமாவின் நான்காவது அணு உலையில் பெரும் தீ ஏற்பட்டுள்ளது. அணைக்க முடியாத அளவுக்கு கொழுந்துவிட்டெரிவதால், இந்த அணு உலை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிர்ச்சி…

ஃபுகுஷிமா டாய்ச்சியிலிருந்து பரவும் அணுக்கதிர் வீச்சு, மியாமி வரை உணரப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கதிர்வீச்சின் முதல் தாக்கம் மியாமியில் தரையிறங்கு முன் விமானத்தில் உணரப்பட்டதாகவும், இது 2 புள்ளிகள் வரை இருந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *