ஹக்:லிபியாவில் நெதர்லாந்து நாட்டு வீரர்கள் மூன்று பேரை கடாபியின் ஆதரவாளர்கள் பிடித்து சென்றுள்ளனர்.லிபியாவின் தலைவர் மும்மர் கடாபியை பதவி விலகக்கோரி எதிர்கட்சியினர் போராடி வருகின்றனர்.
எண்ணெய் வளம் மிக்க பிரிகா நகரை கடாபி ஆதரவு படையினர் கைப்பற்ற முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு மீட்டனர். இதற்கிடையே இந்த நகரத்தின் மீது கடாபி ஆதரவு வீரர்கள் நேற்று விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எத்தனை பலியானார்கள் என்பது தெரியவில்லை.
வடக்கு லிபியாவில் சிர்டி என்ற இடத்தில் தங்கியிருந்த ஐரோப்பியர்கள் இருவரை மீட்பதற்காக, டச்சு நாட்டு ஹெலிகாப்டர் சிர்டியில் தரையிறங்கியது. உடனே அங்கிருந்த கடாபி ஆதரவாளர்கள் டச்சு வீரர்கள் மூன்று பேரை பிடித்து சென்றனர்.சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒடுக்குவதற்காக லிபியா அருகே டச்சு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் சிர்டி வந்த போது தான் டச்சு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க நெதர்லாந்து நாட்டு தூதரக அதிகாரிகள் லிபியா அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
Leave a Reply