புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற, டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை துவக்கவில்லை என காரணம் காட்டி, 122 டெலிகாம் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதன் மீதான உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை சில நிறுவனங்கள் முறைகேடாக பெற்று லாபம் அடைந்துள்ளன என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஒப்பந்தங்களை ஆய்வு செய்த தொலைத் தொடர்பு ஆணையம்(டிராய்) , உரிமம் பெற்ற 122 ஆபரேட்டர்களில் 69 பேரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தது. ஆனால் தொலைத் தொடர்பு துறையோ, 122 நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை துவக்கவில்லை என்று கூறி உரிமத்தை ரத்து செய்தன. இதை எதிர்த்து டெலிகாம் ஆபரேட்டர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதிகள், சிங்வி, கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. டெலிகாம் கம்பெனிகள், மனுதாரர்கள், அரசு தரப்பு பல விதத்திலும் கருத்துக்களை பெற்று விசாரணை நடத்தியது. தன்னார்வ நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ” தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ராஜாவின் பதவி காலத்தில், தொலைத் தொடர்பு துறை மேற்கொண்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
வேண்டியவர்களுக்கு சலுகை, ஊழல் ஆகியவை நடந்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த, நீதிபதிகள் இதன் மீதான உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்தனர்.
Leave a Reply