கோவை திமுக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகக் கூடும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
ஜாதிக் கட்சியான கொமுகவுக்கு திமுக கூட்டணியில் 7 சீட்கள் தரப்பட்டுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெறாவிட்டால் கொமுக திமுக கூட்டணியிலிருந்து விலகலாம் என்று செய்திகள் வெளியாகின. இதை கொமுக மறுத்துள்ளது.
இந்த செய்தி தவறானது, எங்களிடம் அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
இந்த நிலையில், திருப்பூரில் இக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் தேர்தல் பணிகள் குறித்து ஆராயவுள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ளது கொமுக. கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி இங்குதோல்வி அடைய இக்கட்சியே காரணம். எனவே இக்கட்சியை தனது அணிக்கு இழுக்க அதிமுக முயன்றது. ஆனால் திமுக அணியில் போய் இணைந்து விட்டது கொமுக. இந்த நிலையில் திமுக அணியில் காங்கிரஸ் இடம்பெறாமல் போனால், கூட்டணியிலிருந்து கொமுக விலகலாம் என திடீரென பேச்சு கிளம்பியது. இதைத்தான் தற்போது பெஸ்ட் ராமசாமி மறுத்துள்ளார்.
Leave a Reply