தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கேட்கும் தொகுதிகள் இன்று முடிவாகிறது.தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியல் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் அளிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தை கேட்ட 10 தொகுதிகளில் 9 தொகுதி இறுதி செய்யப்பட்டு விட்டன. ஒரு தொகுதி மட்டும் சிக்கலில் உள்ளது.
திட்டக்குடி தொகுதியை விடுதலை சிறுத்தை, காங்கிரசும் கேட்பதால் சிக்கல் நீடிக்கிறது. மற்ற தொகுதிகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டன. விடுதலை சிறுத்தை கட்சிக்கு காட்டுமன்னார் கோவில், சீர்காழி, வானூர், அரூர், ஊத்தங்கரை, கே.வி. குப்பம், செய்யாறு, திருக்கோவிலூர், புவனகிரி, திட்டக்குடி ஆகிய 10 தொகுதிகள் கேட்டு வலியுறுத்தப் படுகின்றன.
இதில் புவனகிரியும், திருக்கோவிலூரும் பொது தொகுதிகளாகும். இரண்டு பொது தொகுதியிலும் 8 தனித் தொகுதியிலும் விடுதலை சிறுத்தை போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. தேர்தல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காக அக்கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. நட்சத்திரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தப்பட்டு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நாளை (16-ந்தேதி) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு நட்சத்திரம் சின்னம் கிடைக்குமா? பொது வான சின்னம் வழங்கப்படுமா? என்பது நாளை தெரிய வரும்.
Leave a Reply