தேர்தல் நெருங்குவதால் மின்தடை நேரம் சத்தமின்றி குறைப்பு: மக்கள் குஷி

posted in: மற்றவை | 0

தென்காசி: மின்தடை நேரம் சத்தமின்றி குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மின்தடை என்பது தினமும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை நீடித்தது. தினமும் 2 மணி நேரம் மின்தடை கட்டாயப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தென்காசி வட்டார பகுதியில் கடந்த 1-ம் தேதி முதல் 2 மணி நேரம் மின்தடை காலை 6 மணி முதல் 8 மணி வரை மாற்றப்பட்டது. தற்போது சட்டடபை தேர்தலை கருத்தில் கொண்டு காலை 6.30 மணி முதல் 8 மணி வரை என்று மின்தடை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

மின்தடை நேரத்தில் அரை மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் +2 தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மின்தடை என்பது இல்லாமல் போகும் சூழல் எற்பட்டாலும் நல்லதே என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *