மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி), நிரந்த வைப்புத் தொகைகளுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பிரிவுகளில், இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1 வருடம் முதல் 499 நாட்கள் வரையிலான நிரந்தர வைப்புத் தொகை மற்றும் 501 நாட்களிலிருந்து 2 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு தரப்பட்டு வந்த 8.50 சதவீத வட்டி, 9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த 9 சதவீத வட்டி விகிதம், 15 லட்சத்திற்கும் குறைவான மற்றும் 15 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரையிலான நிரந்தர வைப்புத் தொகைகளுக்குப் பொருந்தும். இந்த புதிய வட்டி விகிதம், இந்த மாதம் 7ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply