லண்டன்: இந்தியா உலக கோப்பை இறுதி போட்டியில் நுழைந்ததையடுத்து லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் அதைக் கொண்டாடினர்.
நேற்று நடந்த உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வெற்றிகரமாக வீழ்த்தியது. இப்போட்டியின் முடிவு அறிந்தவுடன் லண்டனிலுள்ள இந்தியர்கள் ஈஸ்ட் ஹாம் பகுதியில் ஆயிரக்கணக்கில் கூடி இந்தியாவின் வெற்றியை பெருந்திரளாக கொண்டாடினர்.
இந்திய கொடியை கைகளில் ஏந்தியும் கார்களில் கட்டியும் மிகச் சிறப்பாக கொண்டாடினர். இப்பகுதியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் கூட்டமாக கூடி பாகிஸ்தான் கொடியை ஆட்டி இந்தியர்களின் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் இந்தியர்கள் மிக கண்ணியமாக தங்கள் வெற்றியை மட்டும் கொண்டாடினர். ஆனாலும் பாகிஸ்தானியர்கள் திரண்டதால், அப்பகுதியில் பதட்டம் அதிகரித்தது.
உடனே மெட்ரோ பாலிட்டன் போலீசார் பாதுகாப்புக்கு அப்பகுதியில் குவிந்தனர். போலீசார் பாகிஸ்தானியர்களின் வன்சொற்கள் பிரயோகத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அவர்களை அப்புறப் படுத்தினர்.
இரவு முழுவதும் இந்தியர்கள் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித தொந்தரவும் அளிக்காது தங்களது வெற்றியை கொண்டாடினர். இங்கிலாந்துக்காரர்கள் சிலரும் இந்தியர்களுடன் சேர்ந்து இந்த வெற்றியை கொண்டாடியது வித்தியாசமாக இருந்தது.
தகவல்: லண்டன் ஜாக்
Leave a Reply